உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தனியார் நிறுவனம் வாயிலாக, ஒப்பந்த அடிப்படையில் செக்யூரிட்டி, துாய்மைப் பணி ஆகியவற்றில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தினக் கூலியாக, 725 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், 534 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும், பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பிடித்தம் தகவல் தரப்படவில்லை என்றும் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதை கண்டித்து, மருத்துவமனையில் பணியாற்றும் செக்யூரிட்டி மற்றும் துாய்மைப் பணியாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை