உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீன் விற்பனையில் சற்று முன்னேற்றம்

மீன் விற்பனையில் சற்று முன்னேற்றம்

திருப்பூர், ; சித்ரா பவுர்ணமி, குருபெயர்ச்சி உள்ளிட்ட அடுத்தடுத்த விசேஷ தினங்களால், கடந்த வாரம் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் விற்பனை மந்தமானது. நடப்பு வாரம் மீன் விற்பனை அதிகாலையில் ஓரளவு சுறுசுறுப்பானது. ஆனால், சஷ்டி, முகூர்த்த தினம் என்பதால், மதியம் வரை விற்பனை ஜோராக இல்லை.மீன் வியாபாரிகள் கூறுகையில், ''கடந்த வாரத்தை விட, நடப்பு வாரம் மீன் விற்பனை பரவாயில்லை. ஆனால், வழக்கமாக, 50 டன் விற்கும்; நேற்று பத்து டன் குறைவாகத்தான் மீன் விற்றது. பள்ளிகள் விடுமுறை, பலரும் வெளியூர் பயணம் என இருப்பதால், மீன்களை தேடி வாங்க வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை