உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்மைலி எக்ஸ்போ துவக்கம்

ஸ்மைலி எக்ஸ்போ துவக்கம்

திருப்பூர்; திருப்பூர், பல்லடம் ரோடு, லட்சுமி கல்யாண மண்டபத்தில் 'ஸ்மைலி ஈவன்ட்ஸ்' குழுமத்தின் நுகர்வோர் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று கோலாகலமாக துவங்கியது. துணை மேயர் பாலசுப்ரமணியம் துவக்கிவைத்தார். இதன் நிர்வாக இயக்குனர் அருண், ஒருங்கிணைப்பாளர்கள் சுகன்யா, தங்கவேல், பிரசன்னா ஆகியோர் வரவேற்றனர். இன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேயர் தினேஷ்குமார் பங்கேற்கிறார். திருப்பூர் ஷாப்பிங் திருவிழாவான இக்கண்காட்சியில், நுகர்பொருட்கள், ஆடை வகைகள், நகைகள், பேன்சி வகைகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்டவை பார்வைக்கும், விற்பனைக்கும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இருநுாறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை 5 முதல் 70 சதவீதம் வரை தருகின்றன. நாளை (14ம் தேதி) வரை கண்காட்சி நடைபெறும். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் கேம்ஸ்கள் இடம்பெறுகின்றன. மேலும் விபரங்களுக்கு: 90429 48899 என்ற எண்ணை அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை