உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் பரிசோதனை முகாம்

மண் பரிசோதனை முகாம்

உடுமலை: உடுக்கம்பாளையம் சுற்றுப்பகுதி விவசாயிகள், மண் பரிசோதனை செய்து கொள்ள சிறப்பு முகாம், இன்று கிராம விநாயகர் கோவில் அருகே நடக்கிறது. உடுமலை வட்டார வேளாண்துறையினர் அறிக்கை: உடுக்கம்பாளையம் சுற்றுப்பகுதி விவசாயிகள், தங்கள் மண் மற்றும் நீர் மாதிரிகளை பரிசோதித்து முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள சிறப்பு முகாம், இன்று அக்கிராம விநாயகர் கோவில் அருகே காலை, 10:30 மணி முதல் நடைபெற உள்ளது. பல்லடம் மண் பரிசோதனை நிலையத்தில் இருந்து, நடமாடும் மண் பரிசோதனை வாகனம் கொண்டு வரப்பட்டு, இந்த முகாம் நடைபெற உள்ளது. மண், நீர் மாதிரி ஒன்றுக்கு தலா ரூ. 30 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை