உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வாக்காளர் பட்டியல் திருத்த பணி இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

 வாக்காளர் பட்டியல் திருத்த பணி இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

காங்கயம்: தற்போது தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. உரிய விவரம் மற்றும் ஆவணங்களுடன் ஓட்டுச் சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த படிவம் பூர்த்தி செய்வதில் குழப்பம் நிலவுவதாக பல தரப்பிலும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கு தேர்தல் கமிஷன் சார்பில் பல்வேறு வகையிலும் விழிப்புணர்வு விளக்கங்கள் அளிக்கப்பட்டும் வருகிறது. இருப்பினும் சிலர் இது குறித்து குழப்பமான பதிவுகளையும், தகவல்களையும் தொடர்ந்து பதிந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக காங்கயம் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் (15ம்தேதி) நாளையும் (16ம் தேதி) காங்கயம் நகராட்சியில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு நாட்களும் காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை உரிய பி.எல்.ஓ.,க்கள் மற்றும் தன்னார்வலர்கள் அங்கு பணியாற்றுவர். வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை