உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை

ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை

உடுமலை; கிராம ஊராட்சிகளில், ஊரக வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம் இன்று நடக்கிறது.உடுமலை ஒன்றியத்திலுள்ள கிராம ஊராட்சிகளில், இன்று சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடக்கிறது. 2000 - 2001ம் நிதியாண்டுக்கு முன்பு, அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்த நிலையில், பராமரிப்பு செய்ய முடியாத வீடுகள், முதலமைச்சர் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ், புதிதாக கட்டுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு, இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கும், விண்ணப்பங்கள் தற்போது ஊராட்சி நிர்வாகங்களில் பெறப்படுகிறது.இத்திட்டத்தில், பயனாளிகள் பயன்பெறுவதற்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம், இன்று கிராம ஊராட்சிகளில் நடக்கிறது.போடிபட்டியில், சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.கூட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள், கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டு, மாவட்ட கலெக்டர் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை