முதிர்வுத்தொகை சிறப்பு முகாம்
திருப்பூர்; பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், ஒரு பெண் குழந்தை எனில் 50 ஆயிரம் ரூபாய்; 2 பெண் குழந்தைகள் எனில் 25 ஆயிரம் ரூபாய் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படுகிறது. குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்து, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும், வட்டியுடன் கூடிய முதிர்வுத்தொகை வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகைக்கு விண்ணப்பிக்காத பயனாளிகளுக்காக, நாளை முதல் (8ம் தேதி) வரும் 13ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கும் சமூக நல அலுவலகத்தில் நடைபெறும் இம்முகாமில், சேமிப்பு பத்திரம், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்று சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கவேண்டும் என, கலெக்டர்அறிவுறுத்தியுள்ளார்.