மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சி போட்டி நடத்தி பரிசளிப்பு
உடுமலை,; உடுமலையில் நடந்த மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சியில், போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.உடுமலை கிழக்கு லயன்ஸ் சங்கம் மற்றும் விஜி ராவ் நகர் நல அமைப்பின் சார்பில் மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சி உடுமலை விஜி ராவ் நகர் நல அமைப்பு அலுவலகத்தில் நடந்தது.உடுமலை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கல்யாணி முன்னிலை வகித்தார். பேராசிரியர் கவிதா மகளிரின் தன்னம்பிக்கை குறித்து பேசினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.