ஏ.வி.பி., கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கு
திருப்பூர்; திருப்பூர், திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி., கல்லுாரியில் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கதிரேசன் சிறப்புரையாற்றினார். கல்லுாரி நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சித்துறைத்தலைவர் அசோக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சுப்ரமணி செந்தில்குமார், நைஜீரியா 'ஸ்கைலைன்' பல்கலை மேலாண்மைத்துறை துறைத்தலைவர் பங்கேற்று, உலகலாவிய பார்வையில் வணிக வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தை தழுவி டிஜிட்டல் புரட்சியை வழிநடத்துதல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சீனா, ஹாங்காங், ஆசியா பசிபிக், ரிஸ்க் மேலாளர் வித்யாகர் மனோகரன், பொதுத்துறைகளில் இடர் மேலாண்மையின் பரிணாமம் என்ற தலைப்பில் உரையாற்றினார். பெங்களூரு, கிரிஸ்ட் பல்கலை, கணினித்துறை இணைப்பேராசிரியர், ஸ்ரீ தேவி, மனித இயந்திர ஒத்துழைப்பின் எதிர்காலம் என்ற தலைப்பில் உரையாற்றினார். கருத்தரங்கில் ஆங்கிலம், கணினி அறிவியல், பயோ டெக்னாலஜி, வணிகவியல், மேலாண்மை, டெக்ஸ்டைல் துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்பித்தனர். அவ்வகையில், மொத்தம், 417 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.