மேலும் செய்திகள்
அரசு மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கு
23-Jan-2025
திருப்பூர் ; திருப்பூர், பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், நுாலகத்துறை மற்றும் ஆராய்ச்சிக்குழு சார்பில், முதுகலை மாணவியருக்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் தலைமை வகித்தார். கல்லுாரி நுாலகர் ராமசாமி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் முத்தையா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ' மேலாண்மை மற்றும் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு' எனும் தலைப்பில் பேசினார். எல்.ஆர்.ஜி., கல்லுாரி மூத்த பேராசிரியர் லிட்டிகுரியா 'வளர்ந்து வரும் ஆராய்ச்சிக் கல்வி' எனும் தலைப்பில் பேசினார். பல்வேறு துறை மாணவியர் பங்கேற்றனர். கல்லுாரி நுாலக அலுவலர் அனுராதா நன்றி கூறினார்.
23-Jan-2025