உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புலம்பெயர் தொழிலாளர் பயன்பெற சிறப்பு ரயில்

புலம்பெயர் தொழிலாளர் பயன்பெற சிறப்பு ரயில்

திருப்பூர்: தீபாவளியை முன்னிட்டு, திருவனந்தபுரம் வடக்கு – நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருவனந்தபுரம் வடக்கில் இருந்து நவ. 2, 9, 16ல் (ரயில் எண்: 06073) மதியம் 2:00 மணிக்குப் புறப்படும் ரயில், மூன்றாவது நாள் இரவு 11:50 மணிக்கு நிஜாமுதீனைச் சென்றடையும். திருப்பூரை மறுநாள் அதிகாலை 12:45 மணிக்குக் கடக்கும். மறுமார்க்கத்தில், நவ. 5, 12, 19ல் (ரயில் எண்: 06074) நிஜாமுதீனில் இருந்து அதிகாலை 5:45 மணிக்குப் புறப்படும் ரயில், மூன்றாவது நாள் மாலை 4:30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கைச் சென்றடையும். திருப்பூரை சனிக்கிழமை காலை 6:10 மணிக்குக் கடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை