உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அகற்றியதில் வேகம்; அமைப்பதில் இல்லை

அகற்றியதில் வேகம்; அமைப்பதில் இல்லை

பல்லடம்; முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த மாதம், திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை தருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. உடல் நலக்குறைவு காரணமாக, நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, இம்மாத துவக்கத்தில், உடுமலை மற்றும் பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் மட்டும் முதல்வர் பங்கேற்றார். முதல்வர் வருகையை முன்னிட்டு, திருப்பூர் முதல்- உடுமலை வரை சாலையில் இருந்த வேகத்தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. முதல்வர் வந்து சென்று இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் அகற்றப்பட்ட வேகத்தடைகள் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வாகன விபத்துகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூர் -- பல்லடம் -- உடுமலை வரை உள்ள நெடுஞ்சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லும் நிலையில், வேகத்தடைகள் இல்லாதது விபத்து அபாயத்தை உணர்த்துகிறது. ரோட்டை கடந்து செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியோருக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. முதல்வர் வருகையால், அனைத்து வேகத் தடைகளும் இரண்டே நாட்களில் அகற்றப்பட்டன. ஆனால் அவற்றை மீண்டும் அமைக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். ஏற்கனவே இருந்த இடங்களில் வேகத் தடைகளை உடனடியாக அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை