உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

அவிநாசி : திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யா லயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ ராமகிருஷ்ண அறக்கட்டளை சார்பில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா நடந்தது. சேலம் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலர் சுவாமி யதாத்மானந்தஜி மஹராஜ் சிறப்புரையாற்றினார்.ஸ்ரீ ராமகிருஷ்ண அறக்கட்டளை தலைவர் மகேஸ்வரன் வரவேற்றனர். பள்ளி மாணவிகளின் இன்னிசை; பழனி பாப்பம்பட்டி சூலமங்கலம் பாலகிருஷ்ணனின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி ஆகியன நடந்தன. பள்ளி முதல்வர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.ஸ்ரீ ராமகிருஷ்ண அறக்கட்டளை செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை