உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்குங்க! பெற்றோர் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்குங்க! பெற்றோர் வலியுறுத்தல்

உடுமலை : உடுமலை வட்டார அரசு பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகளை அரையாண்டு தேர்வுக்குள் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.அரசு துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள் அமைப்பதற்கும் அரசு அறிவித்தது. அதற்கான இணையதள இணைப்பு வழங்கும் பணி முதற்கட்டமாக துவக்கப்பட்டது.உடுமலை வட்டாரத்தில், 40 சதவீத பள்ளிகளில் இணைய இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால், இணைய வசதி பயன்பாட்டிற்கான தொகை, மாதந்தோறும் அந்தந்த பள்ளிகளுக்கான வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.இந்நிலையில், இணைய வசதி பெற்றிருக்கும் பள்ளிகளுக்கு, ஸ்மார்ட் போர்டுகள், உயர்தர ஆய்வகங்களுக்கான கம்ப்யூட்டர் வசதிகள் அனைத்தும் பெறப்பட்டுள்ளது. அந்த ஸ்மார்ட் போர்டுகளை பொருத்தினால், வகுப்புகளை துவக்கி விடலாம் என்ற நிலையில், பல பள்ளிகள் தயாராக உள்ளன. இணைய வசதி இல்லாத பள்ளிகளில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.இவ்வாறு இணைய வசதி முதல், ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்கள் பெறுவது வரை, அனைத்து பள்ளிகளும் பல்வேறு சூழலில் இருப்பதால், எந்த பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பெற்றோரும் பள்ளிகளில் தொடர்ந்து வினா எழுப்பி வருகின்றனர்.அனைத்து வசதிகளும் தயாராக இருந்தும், இன்னும் வகுப்புகள் துவங்காத பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழுவினர் ஆசிரியர்களிடம் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.பள்ளி மேலாண்மைக்குழுவினர் கூறியதாவது:பள்ளிகளில் இணைய வசதி பெறுவதற்கு, கல்வித்துறை முக்கியத்துவம் தர வேண்டும். நடப்பாண்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கப்படும் என எதிர்பார்த்தோம்.ஆனால், காலாண்டு முடிந்த நிலையிலும், இன்னும் இத்திட்டம் செயல்படுத்தாமல் இருப்பது ஏமாற்றமாகவே உள்ளது. மாணவர்கள் ஆவலுடன் ஸ்மார்ட் வகுப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.அரையாண்டு தேர்வு இறுதிக்குள், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை துவங்கும் வகையில் அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை