மேலும் செய்திகள்
மாநில கலைத் திருவிழா; 225 பேர் பயணம்
07-Oct-2026
திருப்பூர்: சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான பள்ளி தடகளப் போட்டிகளில் பங்கேற்க, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 196 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தடகளப் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில் வெற்றி பெற்றவர்களில் சிறந்த வீரர், வீராங்கனையரைத் தேர்வு செய்வதற்கான மாநிலப் போட்டிகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்றன. மாணவர் பிரிவுக்கான போட்டிகள் நேற்று தொடங்கி, நவ. 2ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 98 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். வாவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் இளங்கோ தலைமையில் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். மாணவியர் பிரிவுக்கான போட்டிகள் நவ. 1ம் தேதி தொடங்கி, 3ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 98 மாணவியர் பங்கேற்கின்றனர்.
07-Oct-2026