உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாநில கபடி போட்டி வீராங்கனையர் குமரி பயணம்

 மாநில கபடி போட்டி வீராங்கனையர் குமரி பயணம்

திருப்பூர்: இன்று துவங்கி வரும், 7ம் தேதி வரை கன்னியாகுமரியில் மாநில பெண்கள் கபடி சாம்பியன் ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட பெண்கள் கபடி அணித்தேர்வு சமீபத்தில் நடந்தது. தேர்வு செய்த 21 மாணவியருக்கு டிச. 1 முதல், 4 ம் தேதி வரை, வஞ்சிபாளையம், தீரன்சின்னமலை கலை அறிவியல் கல்லுாரியில் மாநில போட்டிக்கான பயிற்சி முகாம் நடந்தது.முன்னதாக, பயிற்சி முகாமுக்கு கல்லுாரி செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் தலைமை வகித்தார். முதல்வர் மோகனசவுந்தரி, நிர்வாக அதிகாரி ரேச்சல் நான்சிபிலிப் முகாமை துவக்கி வைத்தனர். உடற்கல்வி இயக்குனர்கள் ஸ்ரீபிரியங்கா, வெங்கடேஷ் பயிற்சியளித்தனர்.கபடி அணிக்கு வழியனுப்பு விழா, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கபடி கழக சேர்மன் கொங்குமுருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், மாநில பொருளாளருமான ஜெயசித்ரா சண்முகம் வரவேற்றார். கீதாஞ்சலி கோவிந்தப்பன், மாவட்ட கபடி கழக தலைவர் ரோலக்ஸ் மனோகரன் முன்னிலை வகித்தனர். துணை சேர்மன் முருகானந்தம், செய்தி தொடர்பாளர் சிவபாலன், துணைத்தலைவர் ரோலக்ஸ் சுப்ரமணியம், மாவட்ட நடுவர் குழு தலைவர் முத்துசாமி, இணை செயலாளர் வாலீசன், டெக்னிக்கல் கமிட்டி, செயற்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். வீராங்கனை புவனேஸ்வரி தலைமையில் அணி பயணமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ