வேனை திருடிவிட்டு ஓட்டலில் விருந்து
திருப்பூர்; தேனி மாவட்டம், கூடலுாரை சேர்ந்தவர் ராஜா முகமது, 44. சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேனை சிலர் திருடி சென்றனர். தேனி போலீசார் விசாரித்தனர். திருடப்பட்ட வேனில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ்., கருவி மூலம் வேன் உரிமையாளர் இருப்பிடத்தை கண்டறிந்து வந்தார். நேற்று காலை, காங்கயம், படியூரில் வேனை ஒரு ஓட்டல் முன்பு நிறுத்தி, திருடிய நபர்கள் சுவையாக உணவைச் சாப்பிட்டு கொண்டிருந்தனர். மதுரையை சேர்ந்த மாதவன், 42, பால்பாண்டி, 34 என்பது தெரிந்தது. இருவரும் தேனியில் இருந்து வேனை திருடி கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து தேனி போலீசாருக்கு தகவல் அளித்தனர். காங்கயம் வந்த போலீசாரிடம், இருவரையும் ஒப்படைத்தனர்.