உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தெரு நாய்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு  பணி துவக்கம்

 தெரு நாய்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு  பணி துவக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகளுடன் உள்ளது. இவற்றில் உள்ள ரோடுகள், வீதிகள் மற்றும் தெருக்களில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. குப்பை தொட்டி மற்றும் குப்பை தொட்டிகளில் கிடைக்கும் உணவு கழிவுகள்; ஓட்டல் மற்றும் இறைச்சி கடைகளிலிருந்து வீசப்படும் கழிவுகள் போன்றவற்றை உண்டு இவை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இது தவிர தெரு நாய்களுக்கு உணவு அளிப்போர் பலரும் உள்ளனர். தெரு நாய்கள் எந்நேரமும் ரோட்டில் சுற்றித் திரிவது, கூட்டமாகச் சேர்ந்தால் சண்டையிடுவது என அலப்பறை செய்கின்றன. சில நேரங்களில் ரோட்டில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோரை விரட்டிச் செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், தங்கம் மெமோரியல் டிரஸ்ட் மூலம் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகரப் பகுதியில் உள்ள தெரு நாய்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது. கோவாவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் நான்கு பேர் வழிகாட்டுதலின் கீழ், நான்கு மண்டலங்களிலும் இப்பணி நேற்று துவங்கியது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தலா ஒரு குழு என மொத்தம், 120 பேர் ஈடுபட்டுள்ளனர். வார்டு தோறும் வீதி வீதியாகச் சென்று இக்குழுவினர் தெருநாய்கள் குறித்த விவரங்களை பதிவு செய்வர். ஆண் மற்றும் பெண் நாய்; இனப்பெருக்க தடை சிகிச்சை செய்யப்பட்டவை குறித்த விவரங்கள் இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும். இப்பணியை நேற்று காலை மாநகராட்சி மைய அலுவலகத்தில் துணை மேயர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார். மாநகர் நல அலுவலர் முருகானந்த், சுகாதார பிரிவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை