உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்காலர்ஸ் ஆர்க் பள்ளியில்மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு

ஸ்காலர்ஸ் ஆர்க் பள்ளியில்மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு

திருப்பூர் : திருப்பூர், கே.வி.ஆர்., நகர், ஸ்காலர்ஸ் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்கள் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. இப்பள்ளி கேம்பிரிட்ஜ் அங்கீகாரம் பெற்றுள்ளது.விழாவில், சிறப்பு விருந்தினர்களாக செல்வகுமார், சின்னையன் ஆகியோர் பேசுகையில், 'மாணவர்கள் குறைவாக பேசி, அதிக கேள்வியறிவுடன் விளங்க வேண்டும்,' என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ பிரதிநிதிகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.முதன்மை மாணவ தலைவர்களாக சையத் சுபான் (விளையாட்டு), சோனாக்ஷி (ஒழுக்கம்), ஜோவன்ஜை (முதன்மை எடிட்டர்), மாணவியர் தலைவியாக நிலா பிரசாத், மாணவர் தலைவராக யஷ்வந்த் பிரசாத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின், வகுப்பு வாரியாகவும் மாணவ தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை முதல்வர் பூஜா குப்தா உறுதிமொழி வாசிக்க, மாணவ தலைவர்கள் ஏற்றனர். மாணவர் மன்ற நிர்வாகிகளை வாழ்த்தி, பள்ளி தாளாளர் நாராயணமூர்த்தி, பள்ளி வளர்ச்சி குறித்து பேசினார். பள்ளி துணை தாளாளர் இந்திராணி நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை