கதிரவன் மெட்ரிக் பள்ளியில் மாணவர் மன்றம் துவக்கம்
திருப்பூர்; திருப்பூர், கே.வி.ஆர்., நகர், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர் மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக, திருப்பூர் தெற்கு சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் ஜான் பங்கேற்று, தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர் மன்ற தலைவர் சஞ்சய் குமார், துணைத் தலைவர் உத்தமி துர்காஸ்ரீ, விளையாட்டுக்குழு தலைவர் ராகவேந்திரன் மற்றும் குழு தலைவர், துணைத் தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் நாராயணமூர்த்தி, பள்ளி செயலர் இந்திராணி, கதிரவன் அறக்கட்டளை உறுப்பினர் நிவேதா, திருப்பூர் மத்திய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர். விழா நிறைவாக மாணவ, மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.