உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பள்ளியில் அறிவியல் கண்காட்சி மாணவர் படைப்புகள் அசத்தல்

 பள்ளியில் அறிவியல் கண்காட்சி மாணவர் படைப்புகள் அசத்தல்

உடுமலை: உடுமலை வி.ஏ.வி., இன்டர்நேஷனல் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை வி.ஏ.வி., பள்ளி தலைவர் வரதராஜன் துவக்கி வைத்தார். கண்காட்சியில், மாணவர்கள் மோட்டார் வாகன துறை, ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட துறைகளை சார்ந்த தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். இரு துறைகளிலும், தற்போதைய தொழில்நுட்பங்கள், வருங்கால தேவை குறித்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 12டி ேஷா, புத்தக அரங்கு உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சி இன்றும் (6ம் தேதி) நடைபெறுகிறது. காலை, 9:30 மணி முதல் மாலை, 3:30 மணி வரை கண்காட்சி நடைபெறும் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை