ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
திருப்பூர்; தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி கல்லுாரி மாணவர் பரிதாபமாக இறந்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காந்திபுரத்தை சேர்ந்தவர் அஸ்வந்த், 19; பொள்ளாச்சியில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அத்தை மகன் காதணி விழாவில் பங்கேற்க அஸ்வந்த், தனது உறவினர்களுடன் தாராபுரம் சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின், உறவினர்கள், ஐந்து பேருடன் அமராவதி ஆற்றில் கீழே குளிக்க சென்றார். எதிர்பாராதவிதமாக அஸ்வந்த் ஆழமான பகுதிக்கு சென்று, சுழலில் சிக்கி மூழ்கினார். தீயணைப்பு வீரர்கள், அவரது உடலை மீட்டனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.