உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீரி்ல் மூழ்கி மாணவன் பலி 

நீரி்ல் மூழ்கி மாணவன் பலி 

திருப்பூர்: தண்ணீர் தொட்டியில் குளித்து விளையாடிய சிறுவன், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.காங்கயம் அடுத்த ரங்காபாளையம், ஆசாத் நகரைச் சேர்ந்தவர் உமர்பாரூக். அவரது மகன் முகமது உவைஸ்கமல், 15. 11ம் வகுப்பு படித்து வந்தார். தன் நண்பர்களுடன் அங்குள்ள தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தார். எதிர்பாராவிதமாக நீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ