உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெம் பள்ளியில் மாணவ தலைவர்கள் பொறுப்பேற்பு

பெம் பள்ளியில் மாணவ தலைவர்கள் பொறுப்பேற்பு

திருப்பூர் : பூமலுார், பெம் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில், 2025 -2026ம் ஆண்டுக்கான மாணவ தலைவர் பொறுப்பேற்கும் விழா நடந்தது. மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மாணவ, மாணவியருக்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ், பங்கேற்று மாணவ, மாணவியர் அணி தலைவர்களுக்கு பதக்கம் வழங்கி, பேசினார். பள்ளி செயலாளர் சரண்யா, பள்ளி முதல்வர் கவிதா மற்றும் பலர் பங்கேற்று பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ