உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேஷன்ேஷாவில் மாணவியர் கலக்கல்

பேஷன்ேஷாவில் மாணவியர் கலக்கல்

திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு, குமரன் மகளிர் கல்லுாரியில், ஆடை வடிவமைப்புத்துறை சார்பில், 'பேஷன் எக்லெட் -2025' எனும் தலைப்பில் ஆடை, அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் வசந்தி, நிர்வாக அதிகாரி நிர்மல்ராஜ், துறைத் தலைவர் ஹேமலதா ஆகியோர் தலைமை வகித்தனர் சிறப்பு விருந்தினராக பேப்ரிக் ஸ்டோர் ஆன்லைன் நிர்வாக இயக்குனர் நந்தினிதேவி பங்கேற்று, பேஷன்ேஷாவை துவக்கி வைத்தார்.ஆடை வடிவமைப்புத்துறை மூன்றாம் ஆண்டு மாணவியர் தங்கள் உருவாக்கியிருந்த ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர். சக மாணவியர், பிற துறை மாணவியர் கைதட்டி உற்சாகப்படுத்தினர். மாணவி, கன்னிகா பரமேஸ்வரி முதலிடம், காமாட்சி பாண்டி இரண்டாமிடம் பெற்றார். மாணவி லோகப்பிரியா சிறந்த வடிவமைப்பாளராக, மாணவி ஜனனி சிறந்த படைப்பாற்றலாளராக தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை