உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுவாமி புறப்பாடு வாகனங்கள் துாய்மைப்பணியில் மாணவர்கள்

சுவாமி புறப்பாடு வாகனங்கள் துாய்மைப்பணியில் மாணவர்கள்

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவி லில் நேற்று, சுவாமிகள் திருவீதியுலா செல்லும் வாகனங்கள் உள்ள வளாகம் துாய்மை பணி நடந்தது.திருவிழாக்களின் போது, உற்சவமூர்த்திகள் திருவீதியுலா சென்றுவர, 15க்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில், வாகனங்கள் தயார்செய்து வழங்கப்பட்டுள்ளது.ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள, சுவாமி வாகனங்கள் வைத்துள்ள வளாகம் துாய்மை பணி நேற்று நடந்தது.திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர் குழுவினர், வாகனங்களை எடுத்து வெளியே வைத்து வளாகத்தை துாய்மைப்படுத்தினர்.தொடர்ந்து, வாகனங்களை சுத்தம் செய்து,யாகசாலை மண்டப உபகரணங்கள் மற்றும் வாகனங்களை வரிசையாக வைத்தனர். இதேபோல், சுவாமி உலாவரும் வாகனங்களை, மூன்று மாத இடைவெளியில், தொடர்ச்சியாக சுத்தம் செய்து பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, செயல் அலுவலர் வனராஜா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ