உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலை இலக்கிய  போட்டிகள்; மாணவர்கள் பங்கேற்பு

கலை இலக்கிய  போட்டிகள்; மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை; உடுமலை புத்தக திருவிழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகள் நடந்தது.உடுமலை புத்தகாலயம் மற்றும்- திருப்பூர் பின்னல் ட்ரஸ்ட் சார்பில், உடுமலை தேஜஸ் மகாலில், வரும் டிச., 7 முதல், 16 ம் தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது.10வது உடுமலை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடந்தது. பேச்சு, ஓவியம், கட்டுரை என நடந்த போட்டிகளில், உடுமலை சுற்றுப்பகுதிகளைச்சேர்ந்த, 500 -க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி