| ADDED : நவ 24, 2025 06:20 AM
திருப்பூர்: வந்தேமாதரம் பாடல் 150வது ஆண்டை முன்னிட்டு, தேசிய சிந்தனை பேரவை, திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சண்முகாலயா இசை நாட்டிய பள்ளிகள் குழுமம் சார்பில், திருப்பூர், கே.செட்டிபாளையத்திலுள்ள ஸ்ரீ அண்ணாமலையார் கோவிலில், வந்தே மாதரம் பாடல் ஒப்புவித்தல் போட்டி நேற்று நடந்தது. கோவில் அறக்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஸ்டேட் பாங்க் காலனி விநாயகர் கோவில் அறங்காவலர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று, தேசிய உணர்வு பொங்க, வந்தே மாதரம் பாடல் பாடினர். பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசாக புத்தகங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஸ்டெப் இன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிர்வாக இயக்குனர் ஹரிஹரன், பரிசு வழங்கி, பாராட்டினார். ஸ்ரீ சண்முகாலயா இசை நாட்டியப்பள்ளிகள் குழும தலைமை நிர்வாகி, நட்டுவனார் கார்த்திகை பிள்ளை நன்றி கூறினார். திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை அமைப்பாளர் ராமகிருஷ்ணன், ஏற்பாடுகளை செய்திருந்தார்.