பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் மாணவர்கள், 'குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு' உறுதிமொழி எடுத்தனர்.பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், அனைத்து பள்ளிகளிலும் குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டது.அதில், குழந்தை திருமணம் நடப்பது தெரியும் பட்சத்தில், உடனடியாக அதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கும், சுற்றுப்பகுதியில் குழந்தை திருமணம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், குழந்தை தொழிலாளர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கும், தடையற்ற கல்விக்கும் தொடர்ந்து செயல்படுவதற்கும் என கூறப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில், ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்கள் அனைவரும், குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு உருவாக்குவோம் என, உறுதிமொழி எடுத்தனர்.ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களை ஒருங்கிணைத்தார்.