உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தற்கொலை தடுக்க மாணவியர் சூளுரை

தற்கொலை தடுக்க மாணவியர் சூளுரை

திருப்பூர்; உலகம் முழுக்க செப்., மாதம் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி, உளவியல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் வசந்தி, தலைமையேற்று, மாணவிகளை, தற்கொலை தடுப்பு குறித்த உறுதி மொழி ஏற்க செய்தார். உளவியல் துறைத் தலைவர் ராஜேஷ்குமார் வரவேற்றார். தொடர்ந்து, தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு குறித்து, உளவியல் துறை மாணவியரின் நடனம், மவுன நாடகம், பாடல் மற்றும் பேச்சு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில், 'வாழ்க்கைப்பயணம் முடிவுறவில்லை; இன்னும் தொடர்கிறது' என்பதை சித்தரிக்கும் வகையில், மாணவியர் தங்களின் கைகளில் அரைப்புள்ளி சின்னம் வைத்து, தங்களின் ஒப்புதலை தெரிவித்தனர். 'தற்கொலை தடுப்போம்' என்ற சூளுரையுடன், அதுதொடர்பான வாசகம் எழுதி கையெழுத்திட்டனர். கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், பிற துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர். மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிகளை, உளவியல் துறை பேராசிரியர் சிவப்பிரியா ஒருங்கிணைத்தார். பேராசிரியர் அருண்பாரதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை