உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / யோகா போட்டியில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்

யோகா போட்டியில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்

திருப்பூர்; திருப்பூர் சேவா சமிதி, திருப்பூர் நேஷனல் யோகா அசோசியேஷன் சார்பில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டி, திருப்பூர் துவாரகா சிறப்பு பள்ளியில் நடந்தது. இதில், 29 மாணவர்கள் பங்கேற்று, அதில், 21 பேர் முதலிடம் பெற்றனர்; 8 மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர். மேலும், யோகா சிறப்பு பிரிவில், 7 மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர். இவர்கள், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கி வரும் துவாரகா சிறப்பு பள்ளியில், பயிற்றுனர் ஜாவித் மற்றும் ஜெகப்பிரியா ஆகியோரிடம் யோகா பயின்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !