உள்ளூர் செய்திகள்

தடுமாற வைக்கிறது...

திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர் பாஷா, திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனு;அவிநாசி நகரப்பகுதி, சேவூர், புளியம்பட்டி, நம்பியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையாக, கிழக்கு, தெற்கு ரத வீதிகள், பேரூராட்சி அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தையொட்டிய சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் பல இடங்கள் பழுதாகி மேடு, பள்ளமாக இருப்பதாலும், ஆங்காங்கே குழிகள் இருப்பதாலும், வாகன ஓட்டிகள் திணற வேண்டியிருக்கிறது. சமீபத்தில், அத்தகைய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 'பேட்ஜ்' வேலை செய்தாலும், வாகன ஓட்டிகளுக்கான இடையூறு தொடர்கிறது. எனவே, இந்த சாலையில் தேவையான இடங்களில் விரிவாக்கம் செய்து, தார் போட்டு செப்பனிட வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ