உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து

 வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து

உடுமலை: உடுமலையில், பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள துணிக்கடையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இங்குள்ள உடுமலை பொள்ளாச்சி ரோட்டில், வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறைந்து காணப்படும். உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரே, யு.கே.பி., வணிக வளாகத்தில், நியூயார்க் மென்ஸ்வேர் துணிக்கடை உள்ளது. உடுமலையைச்சேர்ந்த கார்த்திகேயன் 53, உசேன் 38 ஆகிய இருவரும் இணைந்து நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, பயங்கர சப்தத்துடன், கடை தீ பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும், உடுமலை, மடத்துக்குளம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து உடுமலை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இரவு நேரத்தில் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டதற்கு காரணம் மின்சாரமா, வேறு ஏதேனும் காரணமா என உடுமலை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ