உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கே.எம்.சி., பள்ளியில் திறனுணர் விழா

கே.எம்.சி., பள்ளியில் திறனுணர் விழா

திருப்பூர்: அவிநாசி வட்டம், பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி., சீனியர் செகண்டரி பள்ளியில் திறனுணர் விழா நடந்தது. பள்ளி தலைவர் சண்முகம், லோகநாயகி அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் மனோகரன் தலைமை தாங்கி, மழலைகளுக்கு வாழ்நாள் கற்றல் குறித்து விளக்கினார். பெற்றோர்களுக்கு வண்ணங்களின் கலையை உணர்த்துதல், மருதாணி அணிவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா சிறப்புரையாற்றி, பரிசுகளை வழங்கினார். முன்னதாக தலைமையாசிரியை பிரேமலதா வரவேற்றார். முதல்வர் தனலட்சுமி முரளிதரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !