கோவில் செயல் அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி
பல்லடம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தமிழகத்தின் 40,000த்துக்கும் மேற்பட்ட கோவில்களை, 600க்கும் அதிகமான செயல் அலுவலர்கள் நிர்வகித்து வருகின்றனர்.அறநிலையத்துறை சட்ட விதிமுறைகளை மீறி, அறங்காவலர்களை நியமிக்காமல், கோவில்களின் தினசரி நிர்வாகத்தை, செயல் அலுவலர்களை நேரடியாக மேற்கொள்ளச்செய்யும் முயற்சியில் அறநிலையத்துறை முனைப்பு காட்டி வருவதாக குற்றஞ்சாட்டி, தமிழகம் முழுவதும், 19ம் தேதி முதல், கருப்பு பேட்ஜ் அணிந்து செயல் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கோவில் நிர்வாக அலுவலர் சங்க செய்தி தொடர்பாளர் வேலுசாமி கூறுகையில், ''40,000 கோவில்களுக்கு, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அறங்காவலர்கள் நியமிக்க வேண்டும். செயல் அலுவலர்கள் பணிச்சுமைகளை சமாளிக்க தேவையான தெளிவான வழிகாட்டுதல் இல்லை. ஆனால், பணிகளை நிறைவேற்ற தவறியதாக தேவையற்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.''முறையான வழிகாட்டுதல் வெளியிடாமல், செயல் அலுவலர்கள் மீது குற்றச்சாட்டுகள் விதிக்கக்கூடாது. அலுவலர்கள் எண்ணிக்கையை உயர்த்தி, பொறுப்புகளை சரியாக நிர்வகிக்க வேண்டும்'' என்றார்.