உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவன்மலை கோவிலில் தெப்போற்சவம்

சிவன்மலை கோவிலில் தெப்போற்சவம்

திருப்பூர் : சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தெப்போற்சவம் நடந்தது. காங்கயம் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த, 26, 27, 28 ஆகிய தேதிகளில் தேரோட்டம் நடந்தது.நேற்று கோவில் அடிவாரத்தில் உள்ள நந்த வனத்தோட்டத்தில் உள்ள தெப்பகுளத்தில் பரிவேட்டை - தெப்ப உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, சுவாமி பரிவேட்டை மண்டபத்துக்கு எழுந்தருளியும், தெப்ப குளத்தை சுற்றி வலம் வந்தும், தெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. பின், நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சுப்ரமணியர் திரும்பினார். வரும் 4ம் தேதி மாலை 3:00 மணிக்கு சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு மலை கோவிலில் திருவிழா கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை