உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓ.இ., மில்லில் பயங்கர தீ

ஓ.இ., மில்லில் பயங்கர தீ

காங்கயம், தம்மரெட்டிபாளையம் ஊராட்சி, ரங்காம்பாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 40. கழிவு பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் ஓ.இ., மில் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு திடீரென மெஷினில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. காங்கயம் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் மெஷின், பஞ்சு கட்டடங்கள் என, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை