பனியன் குடோனில் பயங்கர தீ
திருப்பூர்; திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ஜெ.பி., நகரை சேர்ந்தவர் குமாரவேல், 37. இவரும், இவரது மனைவியும் சேர்ந்து எம்.எஸ்., நகர் ஜவஹர் நகரில் கடந்த மூன்று ஆண்டாக பனியன் குடோன் நடத்தி வருகின்றனர்.நேற்று, இருவரும் குடோனை பூட்டி விட்டு வெளியே சென்றனர். நேற்று மதியம் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், குமாரவேல் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதற்குள், தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. வடக்கு தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து போயின. திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.