வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எங்கே அந்த மாடல் முட்டுக்கல் வாடகை வாயர்கள். டெல்லி போராட்டம் நடந்த போது அங்கே போய் பிலிம் கட்டினார்கள். இப்போ எங்கே...?
திருப்பூர்: தெருநாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போலீசார் தடாலடியாக கலைத்து, விவசாயிகளை கைது செய்தனர்; இச்சம்பவம் விவசாயிகள் மத்தியில், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் கடிப்பதால், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை பலியாகின்றன; இதுவரை, நுாற்றுக்கணக்கான ஆடு, கோழிகள் இறந்துள்ளன. 'இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நாய்களின் வெறியாட்டம் தொடர்ந்த நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலில், சென்னிமலை - காங்கயம் ரோட்டில், பாரவலசு என்ற இடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக, பி.ஏ.பி., பாசன கிளை கால்வாய் பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் ஆதரவளித்தனர்.குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு முழுக்க விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்; நேற்று முன்தினமும் போராட்டம் நீடித்த நிலையில், இரவு, போலீஸ் படை குவிக்கப்பட்டது. விவசாயிகளை தடாலடியாக கலைத்த போலீசார், அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை துாக்கி வீசினர். மாடுகளுடன் போராட்டத்தில் விவசாயிகள் சிலர் ஈடுபட்ட நிலையில் அவர்களது மாடுகளை, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிலரை வலுக்கட்டாயமாக, குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று, வாகனத்தில் ஏற்றினர். விவசாயிகளின் போராட்டக் களம், போர்க்களம் போல் மாறியது. போலீசாரின் இந்நடவடிக்கை விவசாயிகளை கடும் அதிருப்தியடைய செய்திருக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, விவசாயிகள், ஆலோசித்து வருகின்றனர்.
தெரு நாய்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில், 45 நாளில் அரசாணை பெற்றுக் கொடுக்கப்படும் என, கடந்த, நவ., மாதம் கடிதம் வாயிலாகவே மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. அந்த காலக்கெடு முடிந்த நிலையில், 20 நாளில் அரசாணை பெற்றுக் கொடுக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. அதுவும் நடக்காத நிலையில், இரு நாளில் இழப்பீடு தொடர்பான அரசாணை பெற்றுக் கொடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்து, கடிதம் வழங்கியிருந்தனர். இழப்பீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்கியும், அது நடைமுறைக்கு வராமல் இருப்பது, விவசாயிகளின் கோபத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.
எங்கே அந்த மாடல் முட்டுக்கல் வாடகை வாயர்கள். டெல்லி போராட்டம் நடந்த போது அங்கே போய் பிலிம் கட்டினார்கள். இப்போ எங்கே...?