உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல்வர் கோப்பை விளையாட்டு துவங்கியது

முதல்வர் கோப்பை விளையாட்டு துவங்கியது

திருப்பூர்; முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில், திருப்பூர் மாவட்ட அளவில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்க, 34 ஆயிரத்து 668 பேர் முன்பதிவு செய்துள்ளனர். முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், திருப்பூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி, நேற்று, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் துவங்கியது. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன், போட்டிகளை துவக்கி வைத்து பேசுகையில், ''முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணைய தளம் வாயிலாக முன்பதிவு துவங்கியது; திருப்பூர் மாவட்டத்தில், 34 ஆயிரத்து 668 வீரர், வீராங்கனையர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு (2024) திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றவர்களில், 3 தங்கம், 4 வெள்ளி, 9 வெண்கலம் என, 16 பதக்கம் மற்றும், 10.50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு பெற்று, திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்'' என்றார். நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி