உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லோக்சபா தேர்தல் வாக்குறுதியில் கோரிக்கை இடம் பெற வேண்டும்! விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு

லோக்சபா தேர்தல் வாக்குறுதியில் கோரிக்கை இடம் பெற வேண்டும்! விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு

பல்லடம்:திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயற்குழு ஆலோசனைக் கூட்டம், பல்லடத்தில் நேற்று நடந்தது. செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.கூட்டத்துக்கு தலைமை வகித்து தலைவர் வேலுசாமி பேசியதாவது:பெரும்பாலான ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலியை குறைத்து விட்டனர். 2024ல் விசைத்தறி தொழில் நன்றாக இருக்க ஒத்துழைப்பு தேவை. இதற்காக, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.தற்போது, புதிதாக தறி இயந்திரம் வாங்க வேண்டும் என்றால், பழைய இரும்பு கடைக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. தறிகள் இன்றி, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுார், புதுப்பாளையம் சங்கங்கள் காலியாகிவிட்டன. 27 முறை சென்னை சென்று சந்தித்த பின்னரே, விசைத்தறியாளரின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியது. புதிய ஆட்சி அமைந்தால் தான் தொழிலின் நிலை தெரியவரும்.மத்திய, மாநில அரசுகள் தேர்தலை நோக்கியே உள்ளன. நம்மை கவனிக்கவோ, மத்திய அரசிடம் கோரிக்கைகளை கொண்டு சேர்க்கவோ சரியான ஆள் இல்லை. பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும். ஆனால், எடுத்து சொல்ல யாரும் முன்வர மாட்டார்கள். விசைத்தறியாளரின் கோரிக்கைகள், அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ