உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அகிலமெங்கும் படியளக்கும் பரமனுக்கு அன்னாபிேஷக வைபவம் கோலாகலம்

அகிலமெங்கும் படியளக்கும் பரமனுக்கு அன்னாபிேஷக வைபவம் கோலாகலம்

திருப்பூர்: திருப்பூர் வட்டார சிவாலயங்களில் அன்னாபிேஷக வழிபாடு விமரி சையாக நடந்தது. அகிலத்துக்கு படியளக்கும் பரமனை, மெய்யுருக பக்தர்கள் வழிபட்டனர். திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், குட்டகம் மொக்கணீஸ்வரர் கோவில், மேற்குபதி அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில். எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், லட்சுமிநகர் அண்ணாமலையார் கோவில், திருநீலகண்டபுரம் திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக் குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும் நேற்று அன்னாபிேஷக வழிபாடு நடந்தது. நேற்று மதியம், லிங்கத்திருமேனிக்கு, பால், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், விபூதி உட்பட, 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிவலிங்கத்துக்கு வடித்த அன்னம்சாற்றி, அன்னாபிேஷகம் நடந்தது. அன்னத்துடன், பல்வகை காய்கறிகள், பழவகைகள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அன்னாபிேஷகத்தில் அருள்பாலித்த சிவபெருமானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, அன்னாபிேஷகம் கலையப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அன்னாபிேஷக சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விஸ்வேஸ்வரசுவாமி கோவில் திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மதியம் அபிேஷகமும், அன்னாபிேஷகமும் நடைபெற்றது. மாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5:30 மணி வரை, மகா அன்னாபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தது; 6:30 மணிக்கு, அன்னாபி ேஷகம் கலைந்து, சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் சம்பத் சார்பில், அன்னாபிேஷகத்தையொட்டி, தேவாரம் மற்றும் திருவாசக முற்றோதல் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் கிட்டப்பா - வயலின், கோபிசெட்டிபாளையம் சண்முகம் -மிருதங்க இசையில், அவிநாசிதாசனின் தேவார, திருவாசக பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ