உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று திறப்பு விழா காண்கிறது

போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று திறப்பு விழா காண்கிறது

திருப்பூர் : திருப்பூர் மாநகர போ லீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம் கடந்த, 2014ம் ஆண்டு முதல் பூலுவபட்டியில் உள்ள வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய அலுவலகம் அமைக்க பல இடங்களில் இடம் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த, 2 ஆண்டுக்கு முன் அவிநாசி ரோடு, குமார்நகர், 60 அடி ரோட்டில் உள்ள பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கி முழு வீச்சில் நடந்தது.இதையடுத்து, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில், 2.24 ஏக்கர் பரப்பில், ஐந்து மாடிகளுடன் கட்டப்பட்டது. கமிஷனர், துணை கமிஷனர்கள் அறை, உதவி கமிஷனர் கட்டுப்பாட்டு அறை, மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளது. பணிகள் முடிந்து, ஆறு மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்து வந்தது.இச்சூழலில், புதிய கமிஷனர் அலுவலகம் கட்டடம் இன்று காலை திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகர போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்க உள்ளார். அதன் பின், அமைச்சர்கள், கலெக்டர், கமிஷனர், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி வைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை