உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதுப்பொலிவு பெறும் போலீஸ் ஸ்டேஷன்

புதுப்பொலிவு பெறும் போலீஸ் ஸ்டேஷன்

பல்லடம்; பல்லடம், மங்கலம் ரோட்டில் செயல்பட்டு வந்த போலீஸ் ஸ்டேஷன், 2017ல், திருச்சி ரோட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.இதில், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகியன இயங்குகின்றன. புகார் கொடுக்க வரும் மக்களால், பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் எந்நேரமும் பரபரப்பாகவே காணப்படும்.கடந்த ஏழு ஆண்டு களாக, போலீஸ் ஸ்டேஷன், போதிய பராமரிப்புகள் இன்றி காணப்பட்டதால், புகார் அளிக்க வரும் பொதுமக்கள் காத்திருக்கஇடமில்லாத நிலை இருந்தது.சமீபத்தில், புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற மாதையன், போலீஸ் ஸ்டேஷனை புதுப்பிக்கும் முயற்சியை மேற்கொண்டார். அவ்வகையில், போலீஸ் ஸ்டேஷன்உட்புறம் முழுவதுமாக வர்ணம் பூசப்பட்டு வருகிறது.ஸ்டேஷன் வளாகத்தில் இருந்த புதர்கள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பார்க்கிங் இடம், காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளன. புகார் அளிக்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்ய வசதியாக, போலீஸ் ஸ்டேஷன் முன்புறம் இருந்த தேவையற்ற இடர்பாடுகள் அகற்றப்பட்டு, பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்தகைய நடவடிக்கைகள் வாயிலாக, போலீஸ் ஸ்டேஷன் புதுப்பொலிவு பெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ