உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது

சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது

திருப்பூர் : கடந்த சில நாட்களாக உள்ளூர் மற்றும் வெளிமாநில வரத்து இரண்டும் ஒரே நேரத்தில் குறைந்துள்ளது. இதனால், சின்ன வெங்காயம் 25 கிலோ சிப்பம், 900 - 1,100 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. சில்லறை விலையில், 38 - 40 ரூபாய்க்கு விற்கிறது.ஜூலை துவக்கத்தில் கிலோ, 25 - 30 ரூபாய்க்கும், 25 கிலோ சிப்பம் 650 - 750 ரூபாய்க்கும் விற்பனையானது. வியாபாரிகள் கூறுகையில், 'வெளிமாநிலங்களில் வெங்காய விளைச்சல் அதிகரித்ததால், ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தற்போது, சீசன் முடிந்து உள்ளூர் வரத்து குறைந்துள்ளது; வெங்காய ஏற்றுமதியால் வெளிமாநில வரத்தும் குறைந்துள்ளது; இரண்டும் ஒரே நேரத்தில் குறைந்ததால், சின்ன வெங்காயம் கிலோ, 40 ரூபாய்க்கு வந்துள்ளது. வரத்து அதிகரித்தால், விலையில் மாற்றமிருக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !