உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கே.எஸ்.ராமசாமி கவுண்டர் வீட்டில் துவங்கிய சட்ட மறுப்பு ஊர்வலம்

கே.எஸ்.ராமசாமி கவுண்டர் வீட்டில் துவங்கிய சட்ட மறுப்பு ஊர்வலம்

க டந்த, 1928ல் திருப்பூருக்கு, மகாத்மா காந்தி வந்த போது, ஆத்துப்பாலம் பகுதியில் இருந்த, திருப்பூரின் முதல் தியாகி கே.எஸ்.ராமசாமி கவுண்டரின், 'மங்கல விலாஸ்' இல்லத்தில் தான் தங்குவார். கே.எஸ்.ராமசாமி ஒரு சுதந்திர போராட்ட தியாகி. அவரது பெயரில் உருவான அர்பன் வங்கியில், 20 ஆண்டு தலைவராக இருந்தார். எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தவர். அவரது மகன் கே.எஸ்.ஈஸ்வரமூர்த்தி; திருப்பூர் ரயில் நிலையம் எதிர்புறம், மாநகராட்சியின் தாய் சேய் நல விடுதி செயல்பட்டு வரும் இடம், அவர் தானமாக வழங்கியது தான். கே.எஸ்.ராமசாமி வீட்டில் இருந்து தான், பி.எஸ்.சுந்தரம் தலைமையில் திருப்பூர் குமரன் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்ற சட்ட மறுப்பு இயக்க ஊர்வலம் துவங்கியது. ராமசாமி கவுண்டரின் மனைவி தான், ஆரத்தி எடுத்து அவர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார். ராமசாமி கவுண்டர் வீட்டில் காந்தி தங்கியிருந்த சமயத்தில் தான், லண்டனில் நடக்கவுள்ள வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்குமாறு, வெலிங்டன் பிரபுவிடம் இருந்து அழைப்பு வருகிறது. தியாகிகளுக்கு மரியாதை திருப்பூரில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளில், ஏ.கே.பொங்காளி முதலியார், வி.எம்.பொங்காளி முதலியாரும் இடம்பெற்றிருந்தனர். திருப்பூர், இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த அவர் களின் மூன்றாவது தலைமுறை குடும்பத்தினர், ஒவ்வொரு சுதந்திர தின விழாவின் போதும், அவரது புகைப்படம் வைத்து, வீர வணக்கம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நன்னீர் நதிக்கரையில் விடுதலை 'அனல்' திருப்பூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் போராட்டம் குறித்து தங்களின் ஆலோசனை மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றை, நொய்யல் ஆற்றங்கரையோரம் தான் நடத்துவர் என்பதும் வரலாற்று குறிப்பு; அப்போதெல்லாம், நொய்யலில் நன்னீர் வழிந்தோடியிருக்கிறது. ஆனால் இன்று... சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த நொய்யல் ஆறு, நச்சு நீரால் மூச்சு விடவே திணறிக்கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை