உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீண்டும் தலைகாட்டிய மழை

மீண்டும் தலைகாட்டிய மழை

திருப்பூர்; ஒருநாள் இடைவெளியில், திருப்பூரில் நேற்றும் லேசான இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி தாலுகா பகுதிகளில், கடந்த 4ம் தேதி இரவு, கனமழை பெய்தது; இரவு நேரத்தில், எதிர்பாராத வகையில், பெய்த மழையால், குளம், குட்டைகள் நிரம்பின. தாழ்வான பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.ஒரு நாள் இடைவேளை விட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் கனமழை பெய்தது. மாலை, 6:00 மணிக்கு துவங்கிய மழை, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டியது. திருப்பூர் நகரப்பகுதியிலும், அவிநாசி ரோடு, திருமுருகன்பூண்டி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. லேசான இடியுடன் பெய்த கனமழையால், ஞாயிற்றுக்கிழமை பரபரப்பாக காணப்படும், ரோட்டோர கடைகள் மூடப்பட்டன.வடமாநில தொழிலாளர்கள், பெரும்பாலும் ஞாயிறு மதியத்துக்கு பிறகே, 'பர்சேஸ்' செய்ய வருவர். அதற்காக, ரோட்டோர கடைகள் அதிகம் திறக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல் ரோட்டோர கடைகள், காதர்பேட்டை கடைகள் திறக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால், கடைகளை மூடிவிட்டு, வியாபாரிகள் அவசரமாக பொருட்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

மின் கம்பங்கள் முறிந்தன

பூமலுார், வஞ்சிபாளையம் ஆகிய இடங்களில் நான்குக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்துவிழுந்தன. இதனால், மங்கலம், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை