உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆசிரியர் அறவழி; சமூகம் நல்வழி

ஆசிரியர் அறவழி; சமூகம் நல்வழி

கற்பித்தலில் நவீனம் ஒருபுறம்; புத்திசாலித்தனமான மாணவர்கள் மறுபுறம். என்னதான் இருந்தாலும், இடையில், சவால்கள் மிகுந்ததாக மாறியிருக்கிறது ஆசிரியர் பணி. குறிப்பாக, பாதை மாறிப் பயணிக்கும் மாணவ சமூகத்தின் அச்சுறுத்தலை தாங்கி, நல்வழிப்படுத்தும் பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. ஆசிரியரின் சமூகப்பணி, அர்ப்பணிப்பு, தரம் உணர்ந்து யுனெஸ்கோவால் 1994 முதல் அக். 5 உலக ஆசிரியர் தினம் அறிவிக்கப்பட்டது. உலக ஆசிரியர் தினமான இன்று, ஆசிரியர்களின் முக்கியத்துவம், பணிச்சூழல் போன்றன குறித்து, ஆசிரியர்கள் நம்மிடம் பகிர்ந்தவை: தொழில்நுட்பம்கைகொடுக்கிறது குழந்தைகளின் கற்றலை எளிமையாக்குவதில் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. ஸ்மார்ட் போர்டுகளில் பல தேர்வு வினாக்களை விளையாட்டு வடிவில் கொடுக்க முடிகிறது. அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஹைடெக் லேப், ஸ்மார்ட் போர்டு இருக்கின்றன. முறையாகப் பயன்படுத்துவதால் கற்பித்தல் எளிமையாகிறது. இதனால் 100 சதவீதம் கற்றல் சாத்தியமே. ஆசிரியரே முற்றிலும் சொல்லிக்கொடுப்பதைக் காட்டிலும் செய்முறையில் கற்றல் வழியில் கற்பது சிறந்தது. கணிதம், ஆங்கிலம் கற்பிக்கிறேன். வாழ்க்கைக்கு உதவும் கணிதத்தை சுலபவழியில், உச்சரிப்பற்ற ஆங்கில மொழியை 'ஒலியியல்' மூலம் கற்பிக்கிறேன். 'ட்ரை வெர்ப்' மூலம் ஆங்கிலப்பயிற்சி கொடுக்கிறேன். காணொலி மூலம் கற்பிப்பதால் படம் பார்ப்பது போல நினைத்து ஆர்வமாகக் கற்கின்றனர். - ராஜேஷ்,ஆசிரியர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாளக்கரை, அவிநாசி.நல்ல வேலைக்காரன்மோசமான முதலாளி மாணவர்கள் கற்பித்தலை இணையவழியில் கற்கலாம் என்று நினைக்கின்றனர். ஆயிரம் தொழில்நுட்பம் வந்தாலும் நேரடியாக ஆசிரியர் கற்றுக் கொடுப்பதற்கு ஈடாகாது. 'அறிவியல் ஒரு நல்ல வேலைக்காரன்; ஆனால் மோசமான முதலாளி'. வேண்டிய அளவு பயன்படுத்த வேண்டும், நம்மை ஆளவிடக்கூடாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். சிலர் மட்டுமே நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர். க்யூ.ஆர்.கோடு வாயிலாக மாணவர்களுக்கு இணைப்பு அனுப்பி அதில் கேள்வி-பதில் வாயிலாக கற்பிக்கிறேன். அதில் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு சான்றிதழ் வழங்குவது, விளக்கப்படங்கள் வாயிலாக காணொலிகள் என்று பல கோணங்களில் புதுமையை, தொழில்நுட்பத்தை கடைபிடிக்கிறேன். பாடம் தாண்டி உடல் அளவிலும் ஆரோக்கியம் மேம்பட இலவசமாக சிலம்பம் கற்பிக்கிறேன். - கோவிந்தராஜூ,ஆங்கில ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, பூலுவபட்டி.தினமும் கற்றுக்கொண்டுதன்னைத் தானே செதுக்குபவர் ஆசிரியர் தன்னைத்தானே திரும்பத்திரும்ப செதுக்கிக்கொள்பவர். மாணவரின் பாடம் சார்ந்த அல்லது பிற கேள்விகளுக்கு விடையளிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அனைத்து செய்திகளையும் தெரிந்து கொண்டால் மட்டுமே, மாணவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு பதில் கூற முடியும். அதனால் தினம் தினம் நாட்டு நடப்புகளை, உலக இயக்கத்தை தெரிந்து வைத்திருக்கும் தேவை இருக்கிறது. தினமும் கற்றல் அவசியமாகிறது. - பிரபாகர்,தலைமையாசிரியர், தொடக்கப்பள்ளி, சிலம்பகவுண்டன்வலசு.யாரிடம் கற்றுக்கொள்கிறோமோ அவரெல்லாம் ஆசிரியர் தான் ஆசிரியர் பணி என்பது தொழில் சார்ந்ததல்ல. யாரிடம் எதைக் கற்றுக் கொண்டாலும் அவர் ஆசிரியரே. காலம் முழுவதும் கற்றலும் கற்றுக் கொடுத்தலும் நம்மைச் சுற்றிலும் இருப்பவை. ஊடகங்களும் இணையமும் தகவலைக் கொடுக்கின்றன. ஆனால் ஆசிரியரால் மட்டுமே நன்மை, தீமை என பிரித்து, வாழ்வியலைக் கற்றுக் கொடுக்க இயலும். தன்னிடம் படிக்கும் மாணவன் தவறான வழியில் செல்லும் போது நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியருக்கு உண்டு. சமூகத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பில் இருக்கும் ஆசிரியரின் முக்கியத்துவம் மேம்பட வேண்டும். ஆசிரியர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு பாதுகாப்பான வாழ்க்கை முறை அமைய வேண்டும். நன்றாகப் படித்து டாக்டர், இன்ஜினியர் ஆகலாம் என்று கூறுகின்றனர், ஆசிரியராக வேண்டும் என்று கூறுவதில்லை. ஆசிரியர் தொழிலை விடுத்து பிற துறைகளை முன்னிலைப்படுத்த ஆசிரியரின் மீது மதிப்பும் மரியாதையும் குறைவதால் திறமையானவர்கள் இப்பணிக்கு வர தயங்குகின்றனர். இந்நிலை மாற வேண்டும். - பாலசுப்பிரமணியன்,தமிழ்த்துறைத் தலைவர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, திருப்பூர்.- இன்று உலக ஆசிரியர்கள் தினம்.ஆசிரியர் பணி என்பது தொழில் சார்ந்ததல்ல. யாரிடம் எதைக் கற்றுக் கொண்டாலும் அவர் ஆசிரியரே. காலம் முழுவதும் கற்றலும் கற்றுக் கொடுத்தலும் நம்மைச் சுற்றிலும் இருப்பவை. ஊடகங்களும் இணையமும் தகவலைக் கொடுக்கின்றன. ஆனால் ஆசிரியரால் மட்டுமே நன்மை, தீமை என பிரித்து, வாழ்வியலைக் கற்றுக் கொடுக்க இயலும். தன்னிடம் படிக்கும் மாணவன் தவறான வழியில் செல்லும் போது நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியருக்கு உண்டு. சமூகத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பில் இருக்கும் ஆசிரியரின் முக்கியத்துவம் மேம்பட வேண்டும். ஆசிரியர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு பாதுகாப்பான வாழ்க்கை முறை அமைய வேண்டும். நன்றாகப் படித்து டாக்டர், இன்ஜினியர் ஆகலாம் என்று கூறுகின்றனர், ஆசிரியராக வேண்டும் என்று கூறுவதில்லை. ஆசிரியர் தொழிலை விடுத்து பிற துறைகளை முன்னிலைப்படுத்த ஆசிரியரின் மீது மதிப்பும் மரியாதையும் குறைவதால் திறமையானவர்கள் இப்பணிக்கு வர தயங்குகின்றனர். இந்நிலை மாற வேண்டும். - பாலசுப்பிரமணியன்,தமிழ்த்துறைத் தலைவர்,சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, திருப்பூர்.மாணவர்களுக்கு கல்வியோடு, நன்மை, தீமையை சொல்லி சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த முழு சுதந்திரம் கிடைப்பதில்லை. மாணவர்களை கடிந்து கொள்ளும்போது ஆசிரியரின் நோக்கம் அறியாது பெற்றோர்கள் எதிர்க்கின்றனர். மாணவர்களை நல்வழிப்படுத்த எடுக்கும் முயற்சிகள் வீணாகிறது. மாணவர் தவறை சுட்டிக்காட்டினால், ஆசிரியர்மீது குற்றம் கூறுகிறார்கள். ஏதேனும் பிரச்னை வரும்போது, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கு பெற்றோரிடமே தீர்வு உள்ளது. ஆசிரியரே இரண்டாம் பெற்றோர் என்று மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும்போது, ஆசிரியர் விமர்சிக்கப்படுகின்றனர். தேர்ச்சி மட்டும் குறிக்கோளாக வைத்து, மாணவரின் உடல், மனநலம் பாராமல் விளையாட்டு வகுப்பை நிறுத்தி, பள்ளி என்னும் பூங்கா, தேர்ச்சியைத் தேடும் நிறுவனமாக செயல்படுகிறது. ஆசிரியர்கள் கற்பித்தலை தாண்டி, புதிய திட்டம், எழுத்தர், போட்டிகள், விளையாட்டு போன்ற பிற பணியை செய்ய வேண்டியுள்ளது. அதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மாணவர்களுக்கு பாடம் நடத்த நேரம் போதவில்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. வருடாவருடம் புதிய மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், பிற பணியாட்கள் நியமிக்க வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு உண்டான உரிமைகளான பழைய ஓய்வூதியம், உயர்படிப்புக்கான ஊக்கத்தொகை, குறுக்கிய ஈட்டிய விடுப்பை மீண்டும் நீட்டித்தல் போன்றனவற்றை அரசு நிறைவேற்ற வேண்டும். - சுந்தரமூர்த்தி,மாநிலத் தலைவர், தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்கம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ