உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பவுர்ணமி நன்னாளில் ஜொலித்த விஷ்ணு தீபம்

பவுர்ணமி நன்னாளில் ஜொலித்த விஷ்ணு தீபம்

திருப்பூர்; திருப்பூர் பகுதி பெருமாள் கோவில்களில், நேற்று விஷ்ணு தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திர நாளில், அண்ணாமலையார் கோவிலில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.பெருமாள் கோவில்களில், கார்த்திகை பவுர்ணமி நாளில் விஷ்ணு தீபம் ஏற்றப்படுகிறது. அதன்படி, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், அனுமந்தராயர் கோவில், கோவில்வழி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில், விஷ்ணுதீபம் ஏற்றி வைக்கப்பட்டது.மண் பானை அலங்கரிக்கப்பட்டு, பெரிய திரி வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது. பட்டாச்சாரியார்கள் தீபத்துடன் உள்பிரகாரம் மற்றும் வெளிபிரகாரத்தை சுற்றிவந்து, கொடிமரம் முன்பாக தீப ஸ்தம்பத்தில், 'கோவிந்தா... கோவிந்தா...' கோஷத்துடன் விஷ்ணு தீபத்தை ஏற்றி வைத்தனர்.தொடர்ந்து, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி