வாரச்சந்தையை மேம்படுத்தணும்
உடுமலை, ; பல கிராம மக்கள் பயன்பெறும் வகையில், வாளவாடி வாரச்சந்தையை ஒன்றிய நிர்வாகம் மேம்படுத்த வேண்டும்.உடுமலை ஒன்றியம், வாளவாடியில் பழமை வாய்ந்த வாரச்சந்தை உள்ளது. சுற்றுப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் இந்த சந்தையால் பயன்பெற்று வருகின்றனர்.நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் வாரச்சந்தையின் பழைய ஓட்டு கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதன்பின்னர் கட்டப்பட்ட கான்கீரிட் தளமும் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதனால், வாரச்சந்தை செயல்படும் நாட்களில் மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் வளாகத்தை ஆக்கிரமித்து கொள்கின்றனர்.உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர், வாரச்சந்தையை மேம்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.